“இந்தியாவின் மதிப்பு வாய்ந்த பிரபலம்”…. விராட் கோலியை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை பிடித்த நடிகர் ரன்வீர் சிங்…!!

இந்திய அளவில் கடந்த 2022-ம் ஆண்டுக்கான பிரபிலம் வாய்ந்த பிரபலங்களின் பட்டியலை கிரால் என்கிற ஆலோசனை நிறுவனம் அறிக்கையாக வெளியிட்டுள்ளது. அதன்படி சோசியல் மீடியாவில் அவர்களுடைய பிரபலம் மற்றும் அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்களின் மதிப்பு போன்றவற்றைப் பொறுத்து 25 நபர்கள் பிரபலம் வாய்ந்த நபர்களாக மதிப்பிடப்படுகிறார்கள். இந்நிலையில் தற்போது இந்தியாவின் பிரபலம் வாய்ந்த நபர்களில் முதலிடத்தில் பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் இருக்கிறார். கடந்த 5 வருடங்களாக இந்திய கிரிக்கெட் வீரர் விராட் கோலி மதிப்பு வாய்ந்த பிரபலங்களின் பட்டியலில் முதலிடத்தில் இருந்தார். தற்போது கோலியை பின்னுக்கு தள்ளி ரன்வீர் சிங் முதலிடத்தை பிடித்துள்ளார். அதன் பிறகு இந்த பட்டியலில் 3-ம் இடத்தில் பாலிவுட் நடிகர் அக்ஷய்குமார் இருக்கிறார்.

இதனையடுத்து முதன் முறையாக நடிகர் அல்லு அர்ஜுன் மற்றும் நடிகை ராஷ்மிகா மந்தனா என தென்னிந்திய நடிகர், நடிகைகளின் பெயரும் இந்த பட்டியலில் இடம் பெற்றுள்ளது. நடிகை ஆலியா பட் தொடர்ந்து 4-வது இடத்தில் இருப்பதோடு மதிப்பு வாய்ந்த பெண் பிரபலம் என்ற பெருமையையும் பெற்றுள்ளார். டாப் 10 பட்டியலில் நடிகர் அமிதாப் பச்சன், ஹிருத்திக் ரோஷன் மற்றும் ஷாருக்கான் அகியோரின் பெயர்களும் இடம் பெற்றுள்ளது. ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் என்ற நீரஜ் சோப்ரா 23-வது இடத்தைப் பிடித்துள்ளார். மேலும் நடிகர் ரன்வீர் சிங்கின் விளம்பர சந்தை மதிப்பு 1499 கோடியாகவும், விராட் கோலியின் விளம்பர சந்தை மதிப்பு 1460 கோடியாகவும் இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.