“பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல”…. ராகுல் சூப்பர் டுவிட்..!!

பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். 

கடந்த 14ஆம் தேதி இந்தி தினம் கொண்டாடப்பட்டதையொட்டி  மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ட்விட்டரில் கருத்து ஒன்றை பதிவிட்டார். அதில்,  நாட்டின்   ஒரே மொழியாக இந்தி இருக்க வேண்டும். இந்தி மொழியால் மட்டுமே நாட்டையும் , நாட்டு மக்களையும் ஒன்றிணைக்க முடியும் என்று தெரிவித்தார். அமித்ஷாவின் இந்த கருத்துக்கு தமிழகம் மட்டுமில்லாமல் இந்தி பேசாத மாநிலங்களில்  கடுமையான எதிர்ப்பு கிளம்பியுள்ளது. தமிழகத்தில் திமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள்  கண்டனம் தெரிவித்து வருகின்றன.

Image result for India’s many languages are not her weakness rahul gandhi

இந்நிலையில் காங்கிரஸ் எம்பி ராகுல் காந்தி தனது ட்விட்டரில் இந்த கருத்து தொடர்பாக ட்விட்டரில் ஒரு பதிவிட்டுள்ளார். அதில்,  பன்மொழிகள் இந்தியாவின் பலவீனம் அல்ல என்று தெரிவித்துள்ளார்.  தமிழ், இந்தி, கன்னடம், மலையாளம் மராத்தி, தெலுங்கு, ஆங்கிலம், உருது உள்ளிட்ட மொழிகளை குறிப்பிட்டு ராகுல் காந்தி ட்வீட் செய்துள்ளார்.