BIG BREAKING : இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் மருத்துவர் பலி ….!!

இந்தியாவில் கொரோனாவுக்கு முதல் மருத்துவர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

மருத்துவர்கள் முன்னணியில் கொரோனாவுக்கு எதிராக இரவு பகல் பாராமல் போர் செய்து கொண்டிருக்கக் கூடிய நிலையில், அவர்களுக்கான மருத்துவ உபகரணங்கள் சரியாக கிடைப்பதில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்து இருக்கின்றது. டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனை மருத்துவர்கள் சார்பாக கூட கொரோனாவுக்கு எதிராக சிகிச்சை செய்யும் மருத்துவர்களுக்கு பாதுகாப்பான உபகரணம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கடிதம் எழுதப்பட்டிருந்தது.

இப்படியான சூழலில் இந்தியாவில் முதல் முறையாக மருத்துவர் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார். இவர் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கான சிகிச்சை வழங்கி வந்தார் என்று முதற்கட்டமாக சொல்லப்பட்டிருக்கின்றது. இதன் பின்னர் இவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டதால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் தற்போது அவர் உயிரிழந்ததுள்ளதாக இந்தூர் அரசு மருத்துவமனை சார்பில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது இது மிகவும் வருத்தத்துக்குரிய விஷயம் தான்.

அதே போல டெல்லியின் இருக்கக்கூடிய சப்தர்ஜங், எய்ம்ஸ மருத்துவமனையை சேர்ந்த சில மருத்துவர்களுக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டு இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது. இது தவிர மும்பை, ஹைதராபாத், பெங்களூர் என்று  முக்கியமான நகரங்களில் பணிபுரிந்து வந்த மருத்துவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருக்கிறது. இல்லை என்றால் கொரோனா அறிகுறிகளுடன் அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு இருக்கிறார்கள்.இதே போல 20க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் இருக்கின்றனர். இந்த நிலையில் தற்போது மருத்துவர் ஒருவர் உயிரிழந்திருக்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *