“வாட்டி வதைக்கும் கொரோனா” ஈரானில் சிக்கிய இந்தியர்கள்….. 392 பேர் மீட்பு….. மோடிஜிக்கு குவியும் பாராட்டு…..!!

கொரோனா  வைரஸ் தாக்கம் அதிகமாக பரவி வரும் ஈரானில் சிக்கித் தவிக்கும் இந்தியர்களை மத்திய அரசு துரித நடவடிக்கைகள் மூலம் மீட்டு வருகிறது.

உலகம் முழுவதும் வேகமாக பரவி வரும் கொரோனா  வைரஸின் தாக்கம் ஈரானில் அதிவேகமாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்கு சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசிடம் தொடர்ந்து மனுக்கள்  குவிந்த வண்ணமிருந்தன.

இதை ஏற்ற மோடி தலைமையிலான அரசு துரித நடவடிக்கையில் ஈடுபட்டது. அதன்படி இதுவரை 336 பேர் சிறப்பு விமானம் மூலம் மீட்கப்பட்ட நிலையில், இன்று 56 பேர் தாயகம் திரும்பியுள்ளனர். பிரதமர் மோடியின் இந்த நடவடிக்கைக்கு இந்தியா முழுவதும் உள்ள மக்கள் தொடர்ந்து பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.