ஆப்கானிஸ்தானில் உள்ள அனைத்து இந்தியர்களையும் மீட்போம்….!!

ஆப்கானிஸ்தானை தலிபான் தீவிரவாதிகள் கைப்பற்றியதை தொடர்ந்து அங்கு உள் நாட்டினர் மட்டுமின்றி வெளி நாட்டினரும் பாதுகாப்பாக வசிக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆப்கானிஸ்தானில் பல்வேறு நகரங்களில் வசிக்கும் இந்தியர்களையும், தூதரக ஊழியர்களையும் மீட்டு வர மத்திய அரசு சிறப்பு விமானங்களை அனுப்பி வருகிறது.

இந்நிலையில் செய்தியாளர்களிடம் பேசிய மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் அஜய் பட் ஆப்கானிஸ்தானில் சிக்கியுள்ள அனைத்து இந்தியர்களையும் பாதுகாப்பாக பிரதமர் நரேந்திர மோடி நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவித்தார். அங்கிருந்து கடைசி இந்தியர் மீட்டு அழைத்துவரப்படும் வரை ஆப்கானிஸ்தானுக்கு விமானங்கள் அனுப்பப்பட்டு மீட்பு பணி தொடரும் என்றும் அவர் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *