இந்தியர்கள் 11 பேர் சேர்த்து 36 வெளிநாட்டினர் பலி….. அறிக்கையை வெளியிட்டது இலங்கை…!!

இலங்கை தொடர் குண்டுவெடிப்பில் பலியான இந்தியர்களின் எண்ணிக்கை 11_ஆக அதிகரித்துள்ளது.

இலங்கையில் கொழும்பு நகரில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் நட்சத்திர ஓட்டல்களில் கடந்த 21-ந் தேதி அடுத்தடுத்து என 8 குண்டுகள் வெடித்தது. இந்த கொடூர தாக்குதலுக்கு 359 பேர் பரிதாபமாக பலி ஆகினர். மேலும் 500_க்கும் அதிகமானோர்  காயம் அடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த தாக்குதலை நிகழ்த்தியது நாங்கள் தான் என்று IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுகொண்டது. இந்த கொடூர தாக்குதல் தொடர்பாக இது வரை 76 பேர் இலங்கை அரசால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்த தாக்குதலில் உயிரிழந்தவர்களின் விவரம் பற்றி இலங்கை அரசின்  வெளியுறவு துறை சார்பில் அறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அதில் , தொடர் குண்டு வெடிப்பு தாக்குதலில் இதுவரை  36 வெளிநாட்டினர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் , வங்காளதேசம் 1 , சீனா 2 , இந்தியா 11 , டென்மார்க் 3 , ஜப்பான் 1 , நெதர்லாந்து 1 , போர்ச்சுகல் 1 , சவுதி அரேபியா 2 , ஸ்பெயின் 1 , துருக்கி 2 , இங்கிலாந்து 6 , அமெரிக்கா 1 உள்ளிட்டவர்கள் அடங்குவர் .

இதே போல  அமெரிக்கா ,  இங்கிலாந்து நாட்டின் குடியுரிமை வைத்துள்ள 2 பேரும் மற்றும் ஆஸ்திரேலியா மற்றும் இலங்கை நாட்டின் குடியுரிமை வைத்துள்ள 2 ரும் என மொத்தம் 36 பேர் உயிரிழந்தது  அடையாளம் காணப்பட்டுள்ளனர். உயிரிழந்த 14 வெளிநாட்டவரின் விவரம் பற்றிய தெரியவில்லை.  12 வெளிநாட்டினர் காயமடைந்து கொழும்பு நகர மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் அதிகாரபூர்வமாக தெரிவிக்கப்பட்டுள்ளது.