பாரபட்சமின்றி செயல்படுவதில் இந்திய ஊடகம் முதலிடம்…..!!

அரசியல் பாரபட்ச உணர்வோடு ஊடகங்கள் செயல்படுவதில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளதாக  PEW  ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அரசியல் பாரபட்ச உணர்வோடு  ஊடகங்கள் செயல்படுவதில் உலகிலேயே இந்தியா கடைசி இடத்தில் உள்ளது . அதாவது இந்திய ஊடகங்கள் அதிக பாரபட்சமின்றி செயல்படுவதாக ஆய்வு தெரிவிக்கின்றன . ஊடகங்களில் அரசியல் பாரபட்சம் கொண்ட நாடுகளில் பட்டியலை PEW என்ற ஆய்வு நிறுவனம் வெளியிட்டுள்ளது . அதன்படி அதிகளவு பாரபட்சம் காட்டுவதில் லெபனான் ஊடகம் முதலிடம் வகிக்கிறது . அங்கு செய்திகளை ஏற்க முடியாத அளவுக்கு 84 சதவீதமாகவும் ஏற்கும் அளவுக்கு 16 சதவீதம் உள்ளது.கனடாவில் இது 82% மற்றும் 18% _மாக உள்ளது .

அமெரிக்க ஊடகங்கள் 79% ஏற்க முடியாத அளவு செய்திகளையும் , 21 சதவீதம் ஏற்கத்தக்க செய்திகளையும் வழங்குகின்றது . அடுத்தடுத்த இடங்களின் முறையே ஜெர்மனி , பிரிட்டன் , பிரான்ஸ் , தென் கொரியா மற்றும் ரஷ்யா ஆகிய நாடுகள் உள்ளன. பாரபட்ச செய்திகளை வழங்கும் ஊடகங்கள் வரிசையில் இந்தியா கடைசி இடத்தில் உள்ளது . இந்தியாவில் ஏற்கத்தக்க செய்தி அளிப்பது 40 சதவீதமும் ஏற்க முடியாத அளவுக்கு 23 சதவீதமாகவும் மீதமுள்ள 37 சதவீத தகவலை நடுநிலையுடன் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது . பிலிப்பைன்ஸ் , வியட்நாம் , பிரேசில் மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் அடுத்தடுத்த இடம் வகிக்கின்றனது.