இந்தியன் 2 விபத்து வழக்கு : சம்பவ இடத்திற்கு நேரில் சென்று கமல் ஆஜராக தேவையில்லை – உயர்நீதிமன்றம் உத்தரவு!

கடந்த மாதம் 19ம் தேதி இரவு இந்தியன் 2 படப்பிடிப்பு திடீரென கிரேன் அறுந்து விழுந்து விபத்து ஏற்பட்டது இதில் உதவி இயக்குனர் கிருஷ்ணா உட்பட 3 உயிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். நடிகர் கமல்ஹாசனிடம் சென்னை மத்திய குற்றப்பிரிவு அதிகாரிகள் ஆலோசனை நடத்தினர்.

இந்த நிலையில் இந்தியன்-2 படப்பிடிப்பு விபத்து வழக்கில் மத்திய குற்றப்பிரிவு துன்புறுத்துவதாக உயர்நீதிமன்றத்தில் கமல்ஹாசன் முறையீடு செய்துள்ளார். விபத்து நடந்தது எப்படி என நடித்துக்காட்டுமாறு துன்புறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்த வழக்கு அவசர வழக்காக விசாரணைக்கு வந்தநிலையில் அரசியல் பழிவாங்கும் நோக்கில் தனக்கெதிராக காவல்துறையினர் செயல்படுகின்றனர் என கமல் குற்றம் சாட்டியுள்ளார். மேலும் விபத்தில் பாதிக்கப்பட்ட தம்மை விசாரணை என்ற பெயரில் காவல்துறையினர் துன்புறுத்துவதாகவும், துயர சம்பவம் நடந்த இடத்திற்கே வந்து நடித்து காட்டுமாறு காவல்துறையினர் வற்புறுத்துவதாகவும் தெரிவித்தார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, காவல்துறை விசாரணைக்காக விபத்து நடந்த இடத்திற்கு கமல், நாளை நேரில் செல்ல வேண்டியதில்லை என உத்தரவிட்டுள்ளார். மேலும் தேவைப்பட்டால் விசாரணைக்கு மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் ஆஜராகலாம் என தெரிவித்துள்ளார்.