இலங்கைக்கு யாரும் செல்லவேண்டாம், கூடுமானவரை தவிருங்கள் என்று இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
இலங்கையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ஈஸ்டர் திருவிழாவின் போது தேவாலயங்கள் மற்றும் நட்சத்திர விடுதிகள் என அடுத்தடுத்து குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த கொடூர தாக்குதலில் சுமார் 300_க்கும் அதிகமானோர் உயிரிழந்தனர்.இந்த தாக்குதலை நடத்தியதாக IS பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றுக்கொண்டது. இதையடுத்து நேற்று இலங்கையின் கல்முனையில் உள்ள வீட்டில் 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் குண்டுகளை வெடிக்கச் செய்ததில் 4 பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் உயிரிழந்தனர். இதனால் இலங்கையில் தொடர்ந்து பதட்டம் நீடிக்கிறது.
