“பாகிஸ்தானுடன் பேச்சுவாரத்தை” இந்திய அரசு அதிரடி பதில் …..!!

இந்திய அரசு பாகிஸ்தானுடன் பேச்சுவாரத்தை நடத்த தயாராக இருக்கின்றது என்று பாகிஸ்தான் ஊடகம் வெளியிட்டுள்ள செய்தியை இந்திய அரசு மறுத்துள்ளது.

புல்வாமா தாக்குதலையடுத்து இந்திய பாகிஸ்தானை புறக்கணித்து வருகின்றது.  பாகிஸ்தான்  பேச்சுவாரத்தை நடத்த தொடர்ந்து முயற்சித்தும் , பயங்கரவாதத்தை கட்டுபடுத்தாமல் இருப்பதால் பேச்சுவார்த்தைக்கு இடமில்லை என்று இந்தியா உறுதியுடன் இருந்து வருகின்றது. சமீபத்தில் ஜெர்மனி நாட்டின் தலைநகரான பெர்லின் நகரில் நடந்த ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கூட மோடியும் , இம்ரான்கானும் நேருக்கு நேர் ஒரு அறையில் சந்தித்தும் பேச்சுவாரத்தை நடக்கவில்லை என்று சொல்லப்பட்டது.

Image result for pulwama attack

Image result for modi imran khan

இதை மறுக்கும் வகையில் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் சார்பில் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் , பாகிஸ்தான் பத்திரிகையில் வெளியாகியுள்ள செய்தியில் எந்த உண்மையும் இல்லை. தேர்தலில் வெற்றிபெற்று அமைந்த புதிய அரசுக்கு பாகிஸ்தான் நாட்டில் இருந்து  வாழ்த்து தெரிவிக்கப்படடதற்கு பிரதமர் மோடியும் , வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரும் பரஸ்பரம் வாழ்த்து தெரிவித்தனர் என்று கூறப்பட்டுள்ளது.