இந்தியன் பட நடிகை ஊர்மிளா மடோன்த்கர் காங்கிரஸில் இணைந்தார் ..!!

இந்தியன் படத்தில் நடித்த நடிகை ஊர்மிளா மடோன்த்கர் தற்போது காங்கிரஸ் கட்சியில் இணைந்துள்ளார். 

கமல்ஹாசனுடன் இந்தியன் படங்களில் நடித்த பிரபல நடிகை ஊர்மிளா மடோன்த்கர் ஆவார். இவர் தற்போது காங்கிரஸ் கட்சியில் சேர்ந்து , காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்தியை சந்தித்து பாராட்டுகளை பெற்றார். இது குறித்து செய்தியாளர்களை சந்தித்த இவர் கூறியது , நான் காந்தி, நேரு, படேல் போன்றோரின் குடும்பத்தை பின்பற்றி அரசியலுக்கு வந்ததாக தெரிவித்தார்.

இந்தியன் பட நடிகை ஊர்மிளா க்கான பட முடிவு

மேலும் அவர் கூறுகையில் , தற்போது தான்  நான் அரசியலில் முதல் முதலாக கால் வைக்கிறேன் என்றாலும் சமூகத்தை பற்றி நன்றாக தெரிந்து வைத்துள்ளேன். இந்நிலையில் இவர் மக்களவை தேர்தலில் வடக்கு மும்பை தொகுதியில் காங்கிரஸின் வேட்பாளராக களமிறக்கப்படலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இந்த தகவல் உறுப்பினர்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.