திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்… “தல, தளபதி ஸ்டைல்” நெல்லை தம்பதியினரை பாராட்டிய ஹர்பஜன்…!!

இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் நெல்லையில் கொள்ளையர்களை துணிச்சலுடன் ஓட ஓட விரட்டிய வயதான தம்பதியினரை பாராட்டி ட்விட் செய்துள்ளார். 

நெல்லை மாவட்டம் கடையம் அருகே உள்ள கல்யாணிபுரத்தில் சண்முகவேல் மற்றும் செந்தாமரை ஆகிய வயதான தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களது மகன்கள் வெளியூரில் வசித்து வருவதால் இந்த தம்பதியினர் தனியாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில்  நேற்று முன்தினம் இரவு வீட்டின் வெளியே சண்முகவேல் நாற்காலியில் அமர்ந்திருந்தார். அப்போது அவரது பின்புறமாக வந்த கொள்ளையர்கள் அவரின் கழுத்தை துண்டை போட்டு நெரித்துள்ளனர்.

Image result for நெல்லை மாவட்டம் கடையம்

இதையடுத்து அவரது அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்த செந்தாமரை வெளியில் வந்து சற்றும் பயப்படாமல் துணிந்து கையில் கிடைத்த செருப்பு, நாற்காலி உள்ளிட்டவற்றை கொண்டு கொள்ளையர்கள் இருவரையும் தாக்கினார். அவருடன் சேர்ந்து சண்முகவேலும் நாற்காலியை கொண்டு தாக்கினார். கொள்ளையர்கள் இருவரும் கையில் அரிவாள் வைத்திருந்தும் பயப்படாமல் தைரியமாக எதிர்த்து விரட்டினர்.

Image result for நெல்லை மாவட்டம் கடையம்

இதில் செந்தாமரைக்கு மட்டும் கையில் சிறிது அரிவாள் வெட்டு காயம் ஏற்பட்டது. இருந்தும் கூட போராட்டத்தை அவர் விடவில்லை. இந்த காட்சிகள் அங்கிருந்த சிசிடிவியில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோ சமூக வலைத்தளங்களால் வைரலாகி பரவி வருகிறது. துணிச்சலாக போராடிய இந்த வயதான தம்பதியினரை போலீசார் உட்பட பல்வேறு தரப்பினரும் பாராட்டி வருகின்றனர்.

Image result for ஹர்பஜன் சிங்

இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், ஐபிஎல்லில் சென்னை அணிக்காக விளையாடி வரும் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் ட்விட்டரில் அந்த வீடியோவை பதிவிட்டு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளார். அதில் அவர்,  திருட்டு பசங்க எல்லாத்துக்கும் இந்த வீடியோ பாத்தா அல்லு விடும்.என்ன #வீரம் பாசத்துக்கு முன்னாடி நான் பனி பகைக்கு முன்னாடி #புலி ன்னு சொல்ர மாதிரி #மெர்சல் காட்டிட்டாங்க.இது தமிழனின் #நேர்கொண்டபார்வை Hats-off to the elderly couples of Thirunelveli who fought with Robbers