இந்திய கிரிக்கெட் அணியின் புதிய பயிற்சி ஜெர்சி வெளியீடு…!!

இந்திய கிரிக்கெட் அணியின் கிட் ஸ்பான்சராக கடந்த 2016 முதல் 2020 ஆம் ஆண்டு வரை நைக் நிறுவனம் இருந்த நிலையில், 2020 ஆம் ஆண்டிலிருந்து எம்பிஎல் ஸ்போர்ட்ஸ் நிறுவனம் கிட் ஸ்பான்சராக இருந்து வந்தது. இந்த நிறுவனத்துடன் ஒப்பந்த முடிவடைந்த நிலையில் தற்போது புதிய கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனம் பிசிசிஐயுடன் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்திய அணியின் மெயின் ஸ்பான்சராக பைஜூஸ் நிறுவனம் இருக்கும் நிலையில், தற்போது கிட் ஸ்பான்சராக அடிடாஸ் நிறுவனம் தேர்வு செய்யப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தம் ஜூன் 7-ம் தேதி தொடங்கும் ஐசிசி டெஸ்ட் சாம்பியன்ஷிப் போட்டியில் இருந்து தொடங்குகிறது. தற்போது அடிடாஸ் நிறுவனம் வழங்கியுள்ள புதிய பயிற்சி ஜெர்சியை பிசிசிஐ வெளியிட்டுள்ளது. மேலும் இந்த ஜெர்சியை வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் அணிந்துள்ள புகைப்படம் தற்போது இணையதளத்தில் வைரலாகி வருகிறது.

Leave a Reply