ஓமனில் நடந்த கார் விபத்தில் ஹைதராபாத்தைச் சேர்ந்த இளைஞர், மனைவி மற்றும் அவரது 8 மாத குழந்தை உயிரிழந்த நிலையில், மற்றொரு குழந்தை உயிருக்கு போராடி வருகிறது.
ஹைதராபாத்தைச் சேர்ந்த 30 வயதான கவுசல்லா அஸ்மத்துல்லா கான் என்பவர் துபாயில் வசித்து வருகிறார். இவருக்கு ஆயிஷா என்ற 29 வயது மனைவி இருக்கிறார். இந்த ஜோடிக்கு 3 வயதில் ஹனியா என்ற மகளும், 8 மாதமான ஹம்சா கான் என்ற மகனும் இருக்கின்றனர். இந்நிலையில் இவர்கள் நேற்று முன்தினம் காரில் ஓமன் சென்று விட்டு துபாய் திரும்பிக் கொண்டிருந்தனர்.

அப்போது கார் சலாலா என்ற இடத்தின் அருகே வந்து கொண்டிருந்த நிலையில் எதிரே வந்த மற்றொரு காரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் சம்பவ இடத்திலேயே அப்துல்லா, அவரது மனைவி ஆயிஷா, 8 மாத மகன் ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
மேலும் 3 வயது ஹனியா பலத்த காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். உயிருக்கு போராடி வரும் அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றது. இந்திய தம்பதியினர் குழந்தையுடன் ஓமனில் உயிரிழந்த சம்பவம் அங்குள்ள இந்தியர்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.