4ஜி வசதியில் இந்திய நகரங்கள் மோசமான நிலை…. ஆய்வில் வெளியானது தகவல்…!!

இந்தியாவிலேயே ஜார்க்கண்ட் மாநிலத்தின் தன்பாத் நகரில்தான் 4ஜி வசதி சிறப்பாக இருப்பதாக ஆய்வு வெளியாகியுள்ளது.

லண்டனைச் சேர்ந்த ஓபன் சிக்னல் என்ற தனியார் நிறுவனம் இந்தியாவில் 4ஜி வசதி குறித்த ஆய்வை மேற்கொண்டது. இந்திய அளவில் உள்ள முக்கிய நகரங்களில் ஆய்வு செய்யப்பட்டு அங்கு உள்ள 4ஜி_யின் வசதி குறித்து தகவலை வெளியிட்டுள்ளது. அதன்படி இந்தியாவில் ஜார்கண்ட் மாநிலத்தின் தன்பாத்  நகரில் 95.3 சதவீதம் 4ஜி வசதி சிறப்பாக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அடுத்தபடியாக 95% பெற்ற ஜார்கண்ட் தலைநகரம் ராஞ்சி இருக்கிறது. அதே போல  94.9 பெற்ற ஸ்ரீ நகரும்  ,  94 . 8%  பெற்று  நான்காமிடத்தில் ராய்ப்பூர் , பாட்னா அடுத்த நிலையிலும் இருக்கிறது. இந்த ஆய்வு 4ஜி  வசதி கிடைக்கும்எல்லையை வைத்து கணக்கிடாமல் பயனர்களின் பயன்பாட்டு நேரத்தை வைத்து கணக்கிடப்பட்டுள்ளது .

 

அதே போல இந்தியாவின் முக்கிய நகரங்களான டெல்லி , மும்பை , பெங்களூர் , கொல்கத்தா ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களில் கூட இடம்பிடிக்கவில்லை. 4ஜி வசதியில் இந்தியாவின் முக்கிய நகரங்கள் பின்நிலையிலேயே இருக்கின்றன. டெல்லி , மும்பை உள்ளிட்ட நகரங்கள் சற்று பின்தங்கி உள்ளது. பெங்களூர் ,அகமதாபாத் உள்ளிட்ட நகரங்கள் 92% 4ஜி வசதி உள்ளன. ஆனால் இந்தியாவின் முக்கிய நகரங்கள் எல்லாம் 87 க்கும் அதிகமான அளவில் பெற்றுள்ளதாகவும் , இந்தியாவைப் பொருத்தவரை 4ஜி வசதி கொடுப்பதில் ஜியோ 96.7% பெற்று முதலிடத்தில் இருப்பதாகவும் , இது மற்ற போட்டியாளர்களை விட 20 சதவீதம் வரை அதிகம் என்று ஆய்வு தெரிவிக்கின்றது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *