“முன்னாள் ராணுவ வீரர் நடுரோட்டில் வெட்டிக்கொலை”வேலூரில் பரபரப்பு!!..

வேலூர் மாவட்டத்தில் முன்னாள் ராணுவ வீரர் நடுரோட்டில்  கொடூரமாக  வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சத்துவாச்சாரி விஜயராகவபுரம் 2வது தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ் என்பவர் இவர் முன்னாள் இந்திய ராணுவ வீரர் ஆவார். இவர் நேற்றிரவு இவரது நண்பர்களுடன் பேசிக் கொண்டிருக்கும் போது அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அரிவாளால் அவரை சரமாரியாக வெட்டினர்.

இதில் பலத்த காயங்களுடன் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து வேலூர் வடக்கு காவல் நிலைய அதிகாரிகள் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டனர்.இந்த விசாரணையில் முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடைபெற்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது