“இந்தியன்-2” போலீஸ் என்ன டார்ச்சர் பண்ணுறாங்க….. நடிகர் கமல் பரபரப்பு குற்றசாட்டு….!!

விசாரணை என்ற பெயரில் அடிக்கடி அழைத்து காவல்துறையினர் தன்னை டார்ச்சர் செய்வதாக நடிகர் கமலஹாசன் குற்றம்சாட்டியுள்ளார்.

இந்தியன்2 படப்பிடிப்பின் போது கிறேன் கீழே விழுந்த விபத்தில் உதவி இயக்குனர் உட்பட 3 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் உலக மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்து குறித்து டைரக்டர் ஷங்கர், நடிகர் கமலஹாசன் மற்றும் புரடக்ஷன் நிறுவன ஊழியர்களிடம் தொடர்ந்து விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். அதன்படி,

நடிகர் கமல்ஹாசனிடம் இரண்டு முறை விசாரணை மேற்கொண்டு பின்பும் மீண்டும் இன்று பிற்பகல் விசாரணைக்கு ஆஜராகுமாறு காவல்துறையினர் அறிவுறுத்தினர். அதன்படி இன்று விசாரணைக்கு ஆஜராக தயார் நிலையில் இருக்கையில் செய்தியாளர்களை சந்தித்தார் கமல். அப்போது பேசிய அவர்,  காவல்துறையினர் விசாரணை என்ற பெயரில் தன்னை பலமுறை அழைத்து டார்ச்சர் செய்வதாக தெரிவித்தார்.