ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தையில் இந்திய ஆடவர் அணி தங்கப் பதக்கம் வென்று அசத்தியுள்ளது.
ஆசிய விளையாட்டு போட்டியில் வில்வித்தை போட்டியில் அபிஷேக் வர்மா, ஓஜாஸ் பிரவின் மற்றும் பிரதாமேஷ் ஆகியோர் கொரியாவை 235-230 என்ற புள்ளிக்கணக்கில் தோற்கடித்து தங்கம் வென்றனர். இந்த வெற்றியின் மூலம் இந்தியா ஹாட்ரிக் சாதனை படைத்தது, இன்றைய தினம் 3 வது தங்கப் பதக்கத்தை வென்றுள்ளது.

ஆசிய விளையாட்டுப் போட்டிகளின் பதக்க பட்டியலில் 84 பதக்கங்களை வென்று இந்தியா நான்காவது இடத்தில் உள்ளது. ஆசிய விளையாட்டு போட்டியில் 21 தங்கம், 31 வெள்ளி, 32 வெண்கல பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் இந்தியா நான்காம் இடம் பிடித்துள்ளது. 174 தங்கத்துடன் சீனா முதலிடம், 37 தங்கத்துடன் ஜப்பான் இரண்டாம் இடம், 33 தங்கத்துடன் தென் கொரியா மூன்றாம் இடம் பிடித்துள்ளது.