” நியூசிலாந்து அணியுடன் டாஸ் வென்று இந்திய அணி பேட்டிங் தேர்வு “

உலக கோப்பைக்கான பயிற்சி போட்டியில் நியூசிலாந்து அணியுடன் டாஸ் வென்று இந்தியா பேட்டிங் தேர்வு செய்துள்ளது 

உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டியானது இங்கிலாந்தில் வருகிற 30-ஆம் தேதி தொடங்க இருக்கிறது இதனைத் தொடர்ந்து இந்திய அணி ஆனது  தன்னுடைய முதலாவது லீக் போட்டியில் தென் ஆப்பிரிக்க அணியை சந்திக்க இருக்கிறது இந்தப் போட்டியானது சவுதம்டனில் ஜூன் 5 ஆம் தேதி நடைபெற இருக்கிறது உலகக் கோப்பையில் பங்கேற்பதற்கு முன்பாக பங்கேற்கக்கூடிய 10 அணிகளும் தலா 2 பயிற்சிப் போட்டிகளில் விளையாடி வருகிறது

இதனைத் தொடர்ந்து இந்திய அணி ஆனது கேப்டன் விராட் கோலி தலைமையில் இன்று லண்டனில் கேன் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணியுடன் மோதுகிறது இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி ஆனது பேட்டிங்கை தேர்வு செய்து உள்ளது மேலும் இப்போட்டியில் விஜய் மற்றும் கேதர் ஜாதவ் காயம் காரணமாக விளையாடவில்லை மேலும் இந்த பயிற்சி போட்டியானது நான்காவது பேட்டிங் ஆர்டரில் யாரை நியமிக்கலாம் என்று கணிப்பதற்கு உதவும் என்று கூறப்படுகிறது