“பாகிஸ்தான் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது” – பிரதமர் மோடி எச்சரிக்கை!!

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என  பிரதமர் மோடி எச்சரிக்கை விடுத்துள்ளார். 

ராஜஸ்தான் மாநிலம் பார்மரில் தேர்தல் பிரசாரக் கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, 1971ம் ஆண்டு  காஷ்மீர் பிரச்சினையைத் தீர்ப்பதற்கு பொன்னான வாய்ப்பு கிடைத்ததாகவும், இந்திய ராணுவம் பாகிஸ்தானில் உள்ள  பெரும்பகுதிக்குள்  ஊடுருவியிருந்ததாகவும் குறிப்பிட்டார். பாகிஸ்தான் வீரர்கள் 90,000 பேர்  சிறையில் அடைக்கப்பட்டிருந்த  நிலையில், சிம்லா ஒப்பந்தத்தின்படி போர்க்கைதிகளை விடுவிப்பதாக கூறி காங்கிரஸ் ஆட்சியாளர்கள் ஒப்படைத்து விட்டதாக பிரதமர் மோடி சுட்டிக்காட்டினார்.

பாகிஸ்தானின் அணு ஆயுத மிரட்டல்களுக்கு இந்தியா ஒருபோதும் அஞ்சாது என்று கூறிய பிரதமர் மோடி, இந்தியாவிடமுள்ள அணு ஆயுதங்கள் அனைத்தும் தீபாவளிப் பட்டாசு வெடிப்பதற்கு வைத்திருக்கவில்லை என்றும் எச்சரித்தார். இந்திய படையினர் யுத்தமே இல்லாமல் பயங்கரவாதிகளை  அழித்து பயங்கரவாத  இயக்கங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருப்பதாகவும் பிரதமர் மோடி தெரிவித்தார்.