இந்தியா VS தென்ஆப்பிரிக்கா 2-வது டெஸ்ட் …. தொடரை கைப்பற்றுமா இந்தியா ….?

இந்தியா- தென்னாப்பிரிக்காஅணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க்கில்  இன்று தொடங்குகிறது .

இந்திய அணி  தென்ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது . இதில் இந்தியா- தென்னாப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான 2-வது டெஸ்ட் போட்டி ஜோகன்ஸ்பர்க்கில்  இன்று தொடங்குகிறது .இப்போட்டியில்  இந்திய அணி வெற்றி பெற்று தொடரை கைப்பற்றுமா என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது இதில் நடந்த முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 113 ரன்கள் வித்தியாசத்தில் தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது. அதோடு செஞ்சூரியனில்  வெற்றி பெற்று  இந்திய அணி என்ற வரலாற்று சாதனையை படைத்தது .இதனால் அதே உத்வேகத்துடன் 2-வது டெஸ்டிலும்  இந்திய அணி களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதில் பேட்டிங்கில் கேஎல் ராகுல் ,மயங்க் அகர்வால் ஆகியோரின் ஃபார்ம் சிறப்பாக இருந்தாலும், விராட் கோலி , ரஹானே,  புஜாரா  ஆகிய வீரர்கள் நிலைத்து நின்று விளையாட வேண்டியது அவசியமாகும். இதேபோல் பந்துவீச்சில் முகமது ஷமி ,பும்ரா  முகமது சிராஜ் ஆகியோர்  மிரட்டுகின்றனர். இதனிடையே முதல் டெஸ்டில் தோல்வியடைந்த தென்னாப்பிரிக்க அணி இந்த இரண்டாவது டெஸ்டில் வெற்றியை கைப்பற்றும் முனைப்புடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது .அதேசமயம் தென்னாபிரிக்க அணியில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் குயின்டான் டி காக்  திடீரென டெஸ்ட் கிறிக்கெட்டிலிருந்து  ஓய்வு பெற்றிருப்பது அந்த அணிக்கு பெரும் இழப்பாகும்.

இதுகுறித்து அந்த அணியின் கேப்டன் டீன் எல்கர் கூறுகையில் ,” டி காக் -கின் இந்த முடிவு எனக்கு மிகவும் அதிர்ச்சியாக இருந்தது .ஆனால் அவர் சொன்ன காரணங்களை புரிந்து கொண்டேன். இந்நிலையில் அவருடைய ஓய்வு சக வீரர்களின் ஆட்டத்திறனில் பாதிப்பை ஏற்படுத்தும்  என நினைக்கவில்லை “இவ்வாறு அவர் கூறியுள்ளார். அதேசமயம் வேகப்பந்து வீச்சிலும் வலுவாக காணப்படும் தென்ஆப்பிரிக்கா அணி தற்போது பேட்டிங்கிலும் பலவீனமடைந்து உள்ளது. அதேசமயம் பேட்டிங்கில் கேப்டன் டீன் எல்கர் ,பவுமா, மார்க்ராம் ஆகியோர் நிலைத்து ஆட வேண்டும் . இந்திய நேரப்படி இன்று பிற்பகல் 1.30 மணிக்கு தொடங்குகிறது .இதனை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் சேனல் நேரடி ஒளிபரப்பு செய்கிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *