இந்தியா VS இலங்கை தொடர் …. இந்தியாவில் இருமுறை சுற்றுப்பயணம் செய்யும் இலங்கை ….!!!

இலங்கை கிரிக்கெட் அணி இந்த வருடம் இந்தியாவில்  இருமுறை சுற்றுப்பயணம் செய்கிறது .

2022 ஆம் ஆண்டுக்கான இலங்கை அணியின் கிரிக்கெட் போட்டி அட்டவணையை இலங்கை கிரிக்கெட் வாரியம் வெளியிட்டுள்ளது. இதில் இந்த ஆண்டு இலங்கை அணி 8 டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறது. அதே சமயம் ஜிம்பாப்வே,ஆஸ்திரேலியா பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இலங்கை அணி சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ளது.இதைதொடர்ந்து  ஆகஸ்ட்- செப்டம்பர் மாதங்களில் ஆசிய கோப்பை டி20 போட்டி இலங்கையில் நடைபெறுகின்றது. இதையடுத்து பிப்ரவரி- மார்ச் மாதங்களில் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகளில் விளையாடுகிறது.

இதைத் தொடர்ந்து டிசம்பர் 2022 மற்றும் ஜனவரி 2023 மாதங்களில் இலங்கை அணி மீண்டும் இந்தியாவில் சுற்றுப்பயணம் செய்கிறது. இத்தொடருக்கான அட்டவணை இன்னும் உறுதி செய்யப்படவில்லை. இதனிடையே 2023 ஆம் ஆண்டு ஒரு நாள் உலக கோப்பை தொடர் இந்தியாவில் நடைபெற இருப்பதால் இலங்கை கிரிக்கெட் அணி டிசம்பர் மாதம் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 3 அல்லது 5 ஒருநாள் போட்டிகளில் விளையாடும் என எதிர்பார்க்கப்படுகிறது