காலிஸ்தான் தலைவரான அம்ரித்பால் சிங்கை கைது செய்யும் நடவடிக்கைக்கு எதிராக லண்டனில் உள்ள இந்திய தூதரகம் தூதரகத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை தாக்குதல் நடத்தப்பட்டது. இந்த தாக்குதல் தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சகம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து விளக்கம் அளிக்கும் படியும் உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இது தொடர்பாக இங்கிலாந்து வெளியுறவு அமைச்சர் ஜேம்ஸ் கிளவர்லி கூறியதாவது “இந்திய தூதரகத்தின் மீது நடத்தப்பட்ட தாக்குதல் ஏற்றுக் கொள்ள முடியாது. இந்த சம்பவத்தை அரசு தீவிரமாக எடுத்துக் கொண்டு கண்காணித்து வருகின்றது. மேலும் இது போன்ற வன்முறைகளுக்கு இனிமேல் கண்டிப்பாக தக்க பதிலடி கொடுக்கப்படும்” என்று அவர் கூறியுள்ளார்.