மதங்களை புறம் தள்ளி ”தொழில்நுட்பம் நோக்கி முன்னேறுங்கள்” இந்தியாவுக்கு அட்வைஸ் …!!

இந்தியா தொழில்நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டுமே தவிர மதங்களை நோக்கி அல்ல என்று கூகுள் CEO சுந்தர் பிச்சை கருத்து தெரிவித்துள்ளார்.

கூகுள் நிறுவனத்தின் தலைமை நிர்வாகிகள் நிர்வாக அதிகாரி (சிஇஓ) வான தமிழகத்தை சேர்ந்த   சுந்தர் பிச்சை வேர்வ் என்ற செய்தி நிறுவனத்துக்கு அளித்துள்ள பேட்டி தற்போது பெரும் விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. அதில் அவர் இந்திய அரசியலை கடுமையாக சாடியுள்ளார்,அவர் கூறியுள்ள கருத்தில் , நான் அரசியலில் ஆர்வம் கொள்ளவில்லை ஆனால் இந்தியாவில் ஏற்பட்டுள்ள வேலையில்லாத் திண்டாட்டம் , கோடிக்கணக்கான இளைஞர்கள் வேலைகளை இழந்து வருவதை அறிந்து கவலை அடைந்து வருகின்றேன்.

Image result for கூகுள் CEO சுந்தர் பிச்சை

ஒரு அரசு இந்திய நாட்டு மக்களின் நலன்களில் தான் கவனம் செலுத்த வேண்டும். மக்களின் உணவு பழக்கவழக்கங்களில் அல்ல. மாட்டிறைச்சி ,  வேறு உணவை உண்பது என முற்றிலும் தனிநபர் சுதந்திரத்தை தடை செய்ய யாருக்கும் உரிமை இல்லை. மக்களின் சுதந்திரத்தை தீர்மானித்த மன்னரின் காலமான இருண்ட காலத்தில் நாம் வாழ வில்லை.

Image result for கூகுள் CEO சுந்தர் பிச்சை

இந்தியாவை போன்ற மிகப்பெரிய நாடு விஞ்ஞானம், தொழில் நுட்பத்தை நோக்கி முன்னேற வேண்டுமே தவிர மதங்களை நோக்கி அல்ல. அப்படி மதங்களை நோக்கி செல்வது  இந்தியாவின் ஸ்திரத் தன்மையை பாதிக்கும். பல பெரிய தொழிற்சாலைகள் இந்தியாவை விட்டு வெளியேறி கொண்டிருப்பது வர்த்தகத்தை கடுமையாக பாதித்து வருவதை நாம் காண்கின்றோம் என்று சுந்தர் பிச்சை விமர்சித்துள்ளார்.