இந்தியா – பாகிஸ்தான் சம்மதமா..? காஷ்மீர் பிரச்சினைக்கு உதவ தயார்……டிரம்ப் கருத்து …!!

இந்தியா-பாகிஸ்தான் விருப்பம் தெரிவித்தால் காஷ்மீர் பிரச்சினையில் உதவ தயராக இருப்பதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார். 

இந்தியா வரைபடத்தின் மேல் முனையில் இருக்கும் மாநிலம் ஜம்மு காஷ்மீர் . இதனால் பாகிஸ்தான் மற்றும் இந்தியாவுக்கு இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வருகின்றது. இரண்டு நாடுகளுமே காஷ்மீர் பிரச்சனைக்கான தீர்வை நாடுகின்றன. இதையடுத்து பாகிஸ்தான் நாட்டின் பிரதமர் இம்ரான் கான் அமெரிக்காவுக்கு  சுற்றுப்பயணம் மேற்கொண்டு அதிபர் டிரம்ப்_பை சந்தித்தார். பின்னர் அதிபர்  டிரம்ப் காஷ்மீர் பிரச்சினையில், மத்தியஸ்தம் செய்யுமாறு பிரதமர் மோடி என்னை கேட்டுக்கொண்டதாக தெரிவித்தார்.

மோடி விரும்பினால் காஷ்மீர் பிரச்சினையில் தலையிட தயார்: டிரம்ப்

டிரம்ப்பின் இந்த கருத்து பரபரப்பை ஏற்படுத்திய இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் அதிபர் டிரம்பின் கருத்தை திட்டவட்டமாக மறுத்தது.  இதை தொடர்ந்து வாஷிங்டன்னில் இது குறித்த கேள்விக்கு பதிலளித்த டிரம்ப் , காஷ்மீர் பிரச்சினையில் மத்தியஸ்தை ஏற்றுக்கொள்வது பிரதமர் மோடியிடம் தான் உள்ளது. மோடியும் , இம்ரான் கானும் மிகச்சிறந்தவர்கள். காஷ்மீர் பிரச்சினையில் தலையிட வேண்டும் என்று இருநாட்டு தலைவர்களும்  விரும்பினால் அமெரிக்கா உதவ தயாராக இருக்கின்றது என்று டிரம்ப் தெரிவித்தார்.