இந்திய ஓபன் பேட்மிண்டன் : பி.வி.சிந்து அசத்தல் வெற்றி …. 2-வது சுற்றுக்கு முன்னேற்றம் ….!!!

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டியில் நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் வெற்றி பெற்ற பி.வி. சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார்.

இந்திய ஓபன் பேட்மிண்டன் போட்டி டெல்லியில் உள்ள கே.டி. ஜாதவ் இன்டோர் ஹாலில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடந்த மகளிர் ஒற்றையர் பிரிவு ஆட்டத்தில் இந்திய வீராங்கனை பி.வி.சிந்து – ஸ்ரீகிருஷ்ண பிரியா குடரவள்ளி ஆகியோர் மோதினர் .

இதில் 21-5, 21-16 என்ற செட் கணக்கில் வெற்றி பெற்ற பி.வி.சிந்து 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளார். இதை தொடர்ந்து நடைபெறும் அடுத்த சுற்றில் ஐரா சர்மா அல்லது எகிப்தின் தோஹா ஹேனியுடன் பி.வி.சிந்து விளையாட உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *