இந்தியாவுக்கு சுனாமி போன்ற பேரழிவு வருகின்றது – ராகுல்காந்தி

நாடாளுமன்ற கூட்டத்தொடரின் வெளியே செய்தியாளர்களை சந்தித்த மக்களவை உறுப்பினர் ராகுல் காந்தி பேசியதாவது :

எம்பிக்கள் கேள்வி கேட்க விரும்பிய போது சபாநாயகர் ஓம் பிர்லா பேச அனுமதிக்கவில்லை.  உறுப்பினர்களை கேள்வி கேட்க அனுமதிக்காதது தமிழ்மொழி மீதான தாக்குதல். ஏற்கனவே எஸ் வங்கி தொடர்பாக கேள்வி கேட்க நான் விரும்பிய போதும் என்னை அனுமதிக்கவில்லை.

இந்தியாவுக்கு சுனாமி போன்ற பேரழிவு வருகிறது. கொரானாவோடு வரவிருக்கும் பொருளாதார அழிவுக்கும் இந்தியா தன்னை தயார்படுத்திக்கொள்ள வேண்டும்.வரும் ஆறு மாதங்களில் இந்திய மக்கள் கற்பனை செய்ய முடியாத வேதனை அனுபவிக்க போகிறார்கள் என்று வேதனை தெரிவித்தார்.