“பாகிஸ்தானுடன் பேச்சுவார்த்தை கிடையாது” இந்தியா உறுதி …!!

செங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பாகிஸ்தானுடன் எவ்வித பேச்சுவார்தைதையிலும் ஈடுபட போவதில்லை என்று இந்தியா அறிவித்துள்ளது.

கடந்த பிப்ரவரி மாதம் ஜம்முவில் உள்ள புல்வாமா பாயங்கரவாத தாக்குதல் நிகழ்வை தொடர்ந்து பிசக்கெக் நகரில் நடைபெறும் செங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள இருக்கும் பிரதமர் மோடி மற்றும் பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் இடையில் இருதரப்பு குறித்து எவ்விதமான சந்திப்பும் கிடையாது என்று  மத்திய அரசு தெரிவித்துள்ளது.

Image result for பாகிஸ்தான் இந்தியா

பாகிஸ்தான் நாட்டின் எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை நிறுத்தும் வரையில் அந்நாட்டுடன் பேச்சுவார்த்தை என்ற பேச்சுக்கே இடமில்லை என்று இந்தியா பாகிஸ்தானை கடந்த சில ஆண்டுகளாகவே புறக்கணித்து வருகின்றது. அது தொடர்பாக பாகிஸ்தான் விடுக்கும் கோரிக்கைகளைகள் யாவையும் நிராகரித்து வரும் இந்தியா செங்காய் ஒத்துழைப்பு மாநாட்டிலும் பாகிஸ்தானுடன் எந்த சந்திப்பு கிடையாது என்று அறிவித்துள்ளது.