“பிரதமர் மோடி கிர்கிஸ்தான் பயணம்” பாகிஸ்தானிடம் அனுமதி கேட்கும் இந்தியா..!!

பிரதமர் மோடியின் விமானத்தை தங்கள் வான்பரப்பில் பறக்க அனுமதிக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுக்கொண்டுள்ளது 

இந்திய விமானங்கள் எல்லை தாண்டி சென்று பாகிஸ்தானின்  பாலக்கோடு பகுதியில் தாக்குதல் நடத்தியதையடுத்து கடந்த பிப்ரவரி மாதம் இந்திய விமானங்கள் தங்கள் எல்லைக்குள் பறப்பதற்க்கு பாகிஸ்தான் தடை விதித்தது. அந்த தடையை சமீபத்தில் தான் வரும் 15-ம் தேதி வரை பாகிஸ்தான் நீட்டித்தது. இந்த நிலையில் பிரதமர் மோடி வரும் 13ம் தேதி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு கூட்டத்தில் பங்கேற்க கிர்கிஸ்தானுக்கு விமானம் மூலம் பயணம் செய்ய இருக்கிறார்.

Image

பாகிஸ்தான் வழியே சென்றால் 4 மணி நேரத்தில் கிர்கிஸ்தானுக்கு சென்று விடலாம். ஆனால் வேறு வழியில் சென்றால் 8 மணி நேரமாகும்.  ஆகவே பிரதமர் மோடி செல்ல இருக்கும் விமானத்திற்கு பாகிஸ்தான் வான்பரப்பில் அனுமதி அளிக்க வேண்டும் என்று இந்தியா கேட்டுள்ளது. இதற்கு முன்னதாக சுஷ்மா சுவராஜ் வெளியுறவு துறை அமைச்சராக இருந்த போது பாகிஸ்தான் அனுமதியளித்தது. அதே போல பாகிஸ்தான் அமைச்சர் இந்தியா வழியே செல்ல மத்திய அரசு அனுமதியளித்தது.