இன்று பிறந்தநாள் கொண்டாடுகிறார் இந்திய முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான்..!!

இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தனது 41 வது பிறந்த நாளை கொண்டாடுகிறார் . 

2000 -ஆம்  ஆண்டு அக்டோபர் மாதம் நைரோபியில் கென்யாவிற்கு எதிரான ஒருநாள் போட்டியில் இந்தியாவுக்காக அறிமுகமானவர் இடது கை வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான்.அதன்பின் ஒரு மாதத்திற்குப் பிறகு அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் அறிமுகமானார். அப்போதிருந்து, அவர் இந்தியாவின் மிகச்சிறந்த இடது கை வேகப்பந்து வீச்சாளர்களில் ஒருவராக தன்னை நிலைநிறுத்திக் கொண்டார். ஜாகீர் கான் பந்தை நன்றாக சுவிங் செய்து வேகத்தினால் பேட்ஸ்மேனை திணறடிப்பார்.

Image

இவர்  2011 ல்  உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியின் ஒரு பகுதியாக இருந்தவர். இலங்கைக்கு எதிரான இறுதிப் போட்டியில், ஜாகீர் கான்சிறப்பாக பந்து வீசி  2 விக்கெட்டுகளை வீழ்த்தி 3 மெய்டன் ஓவர்களை வீசினார். இந்தியாவுக்காக அவர் கடைசியாக விளையாடிய போட்டி  2014 இல் வெலிங்டனில் நியூசிலாந்திற்கு எதிரான டெஸ்ட் போட்டியாகும். இவர்  2000 – 2014 ஆம் ஆண்டு வரை தனது கிரிக்கெட் வாழ்க்கையில் மொத்தம் 311 டெஸ்ட் விக்கெட்டுகளும், 282 ஒருநாள் விக்கெட்டுகளும் வீழ்த்தியுள்ளார்.

Image

இந்த நிலையில் இந்தியாவின் வேகப்பந்து வீச்சாளர் ஜாகீர் கான் தனது 41 வது பிறந்த நாளை திங்கள்கிழமை இன்று கொண்டாடுகிறார்.இவரது பிறந்த நாளை முன்னிட்டு  சமூக ஊடகங்களில் முன்னாள் இந்நாள் கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் மற்றும் பல்வேறு தரப்பினர்கள் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர். ட்விட்டரில் இவரது ரசிகர்கள்  #ZaheerKhan என்ற ஹேஸ்டேக் மூலம் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *