உக்ரைன் போர் எதிரொலி…. உலகளவில் பொருளாதாரம் பாதிப்பு…. இந்தியாவின் நிலை என்ன…?

உலக பொருளாதாரத்தின் நிலை தொடர்பான அறிக்கையை ஐநா பொருளாதார மற்றும் சமூக விவாதத்துறை வெளியிட்டிருக்கிறது.

ஐ.நா பொருளாதார மற்றும் சமூக விவாதத்துறையின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்ததாவது, உக்ரைனில் நடக்கும் போர் உலக நாடுகளின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை வெகுவாக பாதித்திருக்கிறது. நடப்பு நிதி ஆண்டில் உலகளவில் 3.1% பொருளாதார வளர்ச்சி இருக்கும் என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனவரி மாதத்தில் கூறப்பட்டிருந்ததை காட்டிலும் குறைவாக இருக்கிறது.

இதேபோன்று இந்திய நாட்டின் பொருளாதார வளர்ச்சியானது, 6.4% என்று கணிக்கப்பட்டிருக்கிறது. இது ஜனவரியில் கணிக்கப்பட்டிருந்ததை காட்டிலும் 0.3% சதவீதம் குறைவாகவுள்ளது. இந்தியாவில் பணவீக்கம் அதிகரித்த நிலையிலும், பொருளாதாரம் வேகமாக வளர்ந்து கொண்டிருக்கிறது.

மேலும், இரண்டு வருடங்களுக்கு அந்நாட்டின் பொருளாதார வீழ்ச்சி என்பது வலிமையுடன் இருக்கிறது. பிற நாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியா நன்றாக உள்ளது. அமெரிக்கா மற்றும் சீன நாடுகளின் பொருளாதாரமானது, நடப்பு நிதி ஆண்டில் முறையே 2.6% மற்றும் 4.5% வளர்ச்சியடையும் என்று குறிப்பிடப்பட்டிருக்கிறது.