இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் விரைவில்…!!!

இந்திய கிரிக்கெட் அணியின் பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் இம்மாதம் 16-ம் தேதி நடக்க உள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் புதிய தலைமை பயிற்சியாளரை தேர்வு செய்ய முன்னாள் இந்திய அணித்தலைவர் கபில்தேவ் தலைமையில் மூன்று நபர் கொண்ட ஆலோசனை குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவில் முன்னாள் வீரர் அன்ஷுமான் கெய்க்வாட் மற்றும் முன்னாள் வீராங்கனை சாந்தா ரங்கசாமி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பம் அனுப்பியவர்களில் கிரிக்கெட் வாரியம் நிர்ணயித்துள்ள தகுதி படைத்தவர்களை மட்டும் அழைத்து நேர்காணல் நடத்த உள்ளதாக திட்டமிட்டுள்ளனர்.

Image result for cricket coach

பயிற்சியாளர் பதவிக்கான நேர்காணல் இம்மாதம் 16-ம் தேதி மும்பையில் உள்ள கிரிக்கெட் வாரிய தலைமை அலுவலகத்தில் வைத்து நடைபெறும் என தெரியவந்துள்ளது. தற்போது பயிற்சியாளர் ரவி சாஸ்திரியும் பெயரும் இந்த பதவிக்கு நேரடியாக பரிசீலிக்கப்படுகிறது. மேலும் தற்போது மேற்கிந்திய தீவுகளில் உள்ள அவரிடம் வீடியோ கான்பரன்ஸ் மூலம் நேர்காணல் நடத்தப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.