பாகிஸ்தானுக்கு ஆறுதல் தெரிவித்த இந்தியா..!

பெசாவரில் நிகழ்ந்த தற்கொலை படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது. பாகிஸ்தான் நாட்டின் பெசாவரில் பாதுகாப்பு நிறைந்த போலீஸ் லைன் பகுதி உள்ளது. இங்குள்ள மத வழிபாட்டுத்தளத்தில் சக்தி வாய்ந்த குண்டு வெடித்தது. இதில் கட்டிடத்தில் ஒரு பகுதி இடிந்து விழுந்தது. இதனால் அங்கு பதற்றமான சூழல் ஏற்பட்டது. காவல்துறையினரும் மீட்பு படையினரும் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

குண்டு வெடிப்புகளில் காயம் அடைந்தவர்கள் இடிபாடுகளில் சிக்கி இருந்தவர்களை மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டனர். தற்கொலை படை தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 92 ஆக அதிகரித்துள்ளது. இந்த நிலையில் பெசாவரில் நிகழ்ந்த தற்கொலை படை தாக்குதலுக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.