இந்தியா அபார பந்து வீச்சு…. 8_ஆவது ஓவரில் முதல் பவுண்டரி அடித்த நியூஸி……!!

இந்தியா நியூசிஸிலாந்து அணிகள் மோதும்  உலகோப்பை அரையிறுதி போட்டியில் நியூஸிலாந்து அணி 8_ஆவது ஓவரில் முதல் பவுண்டரியை அடித்துள்ளது.

நடைபெற்றுவரும் 2019- உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் அரையிறுதி   போட்டியில் இந்தியா ,  நியூசிலாந்து அணிகள் மோதி வருகின்றன. மான்செஸ்டரில் உள்ள எமிரேட்ஸ் ஓல்ட் டிராஃபோர்ட் மைதானத்தில் நடைபெற்று வரும் இந்த போட்டியில்  டாஸ் வென்ற நியூசிலாந்து அணி பேட்டிங்கை தேர்வு செய்து ஆடி வருகின்றது.

உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டி: 8-வது ஓவரில் முதல் பவுண்டரி அடித்த நியூசிலாந்து

நியூசிலாந்துக்கு எதிராக இந்தியா அபாரமாக பந்து வீசி வருவதால் நியூஸிலாந்து தொடக்க முதலில் ரன் எடுக்காமல் திணறி வந்தது.   புவனேஷ்வர் குமார். தனது இரண்டு ஓவர்களை மெய்டனாக வீச, 14 பந்துகளை சந்தித்த கப்தில் பும்ரா பந்து வீச்சில் கோலியிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மேலும் இந்தியாவின் அதிரடி பந்து வீச்சால் நியூஸிலாந்து அணி தனது முதல் பவுண்டரியை 8-வது ஓவரில்தான் அடித்தது.