‘இந்திய எல்லையை பாதுகாப்பதில் உறுதியாக உள்ளோம்’ ராஜ்நாத் சிங் சீன பாதுகாப்பு துறை மந்திரியுடன் ஆலோசனை ..!!

இந்தியப் படையினர் எல்லையை பாதுகாப்பதில் உறுதியாக இருப்பதாக ராஜ்நாத் சிங் சீன பாதுகாப்பு துறை மந்திரியிடம் தெரிவித்தார்.

3 நாட்கள் பயணமாக இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத்சிங் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ரஷ்யா சென்றிருந்தார். நேற்றுமுன்தினம் ரஷிய பாதுகாப்புத்துறை மந்திரி ஜெனரல் சர்ஜெ ஷோய்குவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.சீனாவுடன் எல்லை விவகாரத்தில் மோதல் போக்கு இருந்து வந்த நிலையில் இந்த கூட்டத்தில் பங்கேற்ற சீன பாதுகாப்பு துறை மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்திப்பாரா? என்பதில் குழப்பம் நிலவி வந்தது. ஆனால் சீன ராணுவ மந்திரி ராஜ்நாத் சிங்கை சந்திக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த கோரிக்கையை ஏற்று இரு நாட்டு பாதுகாப்பு துறை மந்திரிகள் பேச்சுவார்த்தை நடத்த சம்மதம் தெரிவித்தனர். இதனை அடுத்து சீனா பாதுகாப்புத்துறை மந்திரி விய் பென்ஹி மற்றும் இந்திய பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் கோவின் இருவருக்குமிடையே இந்திய நேரப்படி 9.30 மணி அளவில் பேச்சுவார்த்தை தொடங்கியது. இரண்டு மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் எல்லை விவகாரம் தொடர்பாக முக்கிய ஆலோசனைகள் நடைபெற்றது.

இது குறித்து அவர் ராஜ்நாத் சிங் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது: ” கால்வான் பள்ளத்தாக்கு பகுதிகளில் இந்தியாவின் நிலைப்பாட்டை சீனாவிற்கு எடுத்துரைக்கப்பட்டன. சீன படையினரின் குவிப்பு, அவர்களின் மூர்க்கத்தனமான நடவடிக்கை, எல்லைப்பகுதியை தன்னிச்சையாக மாற்றியமைக்க முயற்சிப்பதும், இருநாடுகளுக்கும் ஒப்பந்தத்தை மீறல் போன்ற செயல்களில் ஈடுபடுவதை குறித்து அவர் தெரிவித்திருந்தார். இந்திய வீரர்கள் எப்பொழுதுமே பொறுமையுடன் நடந்து கொள்வார்கள். அதே சமயம் இந்திய எல்லைகளையும் நாட்டின் இறையாண்மையும் பாதுகாப்பதில் நாங்கள் உறுதியாக உள்ளோம்.

இரு நாடுகளுக்கும் இடையே அமைதியை பாதுகாப்பது, குறித்தும் அமைதியை நிலைநாட்டுவது குறித்தும் பேசப்பட்டது. இருதரப்பு முரண்பாடுகள் மோதலை ஏற்படுத்த அனுமதிக்கக்கூடாது. மேலும் இருநாட்டு ஒப்பந்தத்தின்படி பிங்யாக் லேக் மற்றும் பிற எல்லைப் பகுதிகளில் இருந்து படையினரை விலக்கிக் கொள்வது தொடர்பாக இந்தியாவுடன் இணைந்து செயல்பட வேண்டும். இனி எந்த ஒரு தரப்பினரும் எந்த நடவடிக்கை எடுத்தாலும் அது நிலைமையை இன்னும் மோசமாக்கி விடும். மேலும் எல்லையில் இருந்து சீன படை வீரர்களை விரைவாக வெளியேற்றி இரு நாடுகளுக்கும் இடையே ராஜாங்க மற்றும் ராணுவ ரீதியிலான பேச்சுவார்த்தையை தொடர்ந்து மேற்கொள்ள வேண்டும் என தெரிவித்திருந்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *