75வது சுதந்திர தினம்…. 55 அடியில் பிரமாண்ட நினைவு தூண்…. தீவிரமாக நடைபெறும் பணி….!!

சுதந்திர தின விழா நினைவு துணை திறப்பதற்கான பணி வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றது.

இந்தியாவின் 75ஆவது சுதந்திர தின விழா வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதி கொண்டாடப்பட இருக்கின்றது. இந்நிலையில் சென்னையில் கட்டப்பட்டு வரும் சுதந்திர தின நினைவு தூணை முதல்வர் மு.க ஸ்டாலின் ஆகஸ்ட் 15ஆம் தேதி திறந்துவைக்க ஏற்பாடு  செய்யப்பட்டுவருகின்றது.

இதில் முதல்வர் மு.க ஸ்டாலின் 75ஆவது சுதந்திர தின விழாவை நினைவுபடுத்தும் வகையில் நினைவுத் தூண் அமைக்கப்படும் என்று அண்மையில் அறிவித்திருந்தார். அதன்படி தூண் அமைபதற்கான இடத்தை சென்னை காமராஜர் சாலையிலுள்ள நேப்பியர் பாலம் அருகே தேர்வு செய்யப்பட்டிருந்தது.

இதனையடுத்து பாலம் அமைப்பதற்காக ரூபாய் 1.94 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு கடந்த மாதம் 3-ம் தேதி தூண் அமைப்பதற்கான பணிகள் தீவிரமாக தொடங்கியது. இதனையடுத்து முதலமைச்சரின் உத்தரவின் பேரில் பொதுப்பணித் துறை அதிகாரிகளின் மேற்பார்வையில் சுதந்திர தின நினைவுத்தூண் அமைக்கும் பணி மிகவும் தீவிரமாக நடைபெற்று வந்தது.

மேலும் நினைவுத்தூணின் அடித்தளம் 10 அடி நீளம், 10 அடி அகலம் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 55 அடி உயரம் கொண்ட நினைவுத்தூணின் பணி தற்போது நிறைவு பெற்று ஆகஸ்ட் 13-ஆம் தேதி அரசிடம் ஒப்படைக்கபட இருக்கின்றது. மேலும் வருகின்ற ஆகஸ்ட் 15-ஆம் தேதி சுதந்திர தினத்தன்று நினைவுத் துணை முதலமைச்சர் மு. க ஸ்டாலின் திறந்து வைப்பதற்கான ஏற்பாடுகள் வெகு சிறப்பாக நடைபெற்று வருகின்றன என பொதுப்பணித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *