தொலைக்காட்சியில் பார்த்து மகிழுங்கள்….!! 75 ஆவது சுதந்திர தின விழா…. தமிழக அரசின் வேண்டுகோள்….!!

சுதந்திர தின விழாவை நேரில் காண வருவதை தவிர்க்க வேண்டுமென பொதுமக்களுக்கு பொது துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்தியாவில் 75-ஆவது சுதந்திர தின விழா வருகின்ற 15-ஆம் தேதி நடைபெற இருக்கின்றது. இந்நிலையில் சுதந்திர தின விழாவை பொதுமக்கள், பள்ளி குழந்தைகள், மாணவர்கள் மற்றும் மூத்த குடிமக்கள் நேரில் வந்து காண வருவதை தவிர்க்க வேண்டுமென தமிழக அரசு வேண்டு கோள் விடுத்துள்ளது. இந்நிலையில் இந்திய சுதந்திர தின திருநாளன்று தலைமை செயலக கோட்டை கொத்தளத்தில் தமிழக முதல்வர் காலை 9 மணி அளவில் தேசிய கொடியினை ஏற்றி சிறப்பிப்பார்.

ஒவ்வொரு ஆண்டும் சுதந்திர தின நிகழ்ச்சியின் போது சுதந்திர போராட்ட தியாகிகள், பொதுமக்கள், மாணவர்கள் மற்றும் பள்ளி குழந்தைகள் பங்கேற்று கொள்வர். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று காரணமாக பள்ளி குழந்தைகள், கல்லூரி மாணவர்கள் நிகழ்த்தும் கலை நிகழ்ச்சிகள் போன்றவை நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் சுதந்திர போராட்ட வீரர்களின் வயது மூப்பினை கருத்தில் கொண்டு கொரோனா தொற்று பரவலை தவிர்க்கும் விதமாக சுதந்திர அவர்களின் வீடுகளுக்கே சென்று அதிகாரிகள் மூலம் பொன்னாடை போர்த்தி உரிய மரியாதை செலுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சுதந்திர தின நிகழ்ச்சியை வானொலிகள் மற்றும் தொலைக்காட்சிகள் மூலமாக நேரடி ஒலி, ஒளி பரப்ப ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து கூட்டம் கூடுவதை தவிர்க்கும் பொருட்டு இந்த வருடம் கல்லூரி மாணவர்கள், பள்ளி குழந்தைகள், மூத்த குடிமக்கள் மற்றும் பொது மக்கள் சுதந்திர தின விழாவினை நேரில் காண வருவதை தவிர்க்க வேண்டுமாறு பொதுத் துறை சார்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் சுதந்திர தின நிகழ்ச்சிகளை தொலைக்காட்சி, வானொலியில் கண்டு, கேட்டு மகிழுங்கள் என்று பொதுத்துறை அரசு செயலாளர் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *