IND VS SA : வலுவான நிலையில் தென் ஆப்பிரிக்கா…. வெற்றிக்காக போராடும் இந்தியா ….!!!

இந்திய அணிக்கெதிரான 3-வது டெஸ்டில்  மூன்றாம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது.

இந்தியா – தென் ஆப்ரிக்கா அணிகளுக்கிடையேயான 3-வது மற்றும் கடைசி டெஸ்ட் போட்டி கேப்டவுனில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்ஸ் அனைத்து விக்கெட் இழப்புக்கு 223 ரன்கள் எடுத்தது. இதில் அதிகபட்சமாக கேப்டன் விராட்கோலி 79 ரன்கள் எடுத்தார் .இதன் பிறகு களமிறங்கிய தென் ஆப்பிரிக்க அணி முதல் இன்னிங்சில் 210 ரன்னில் ஆல் அவுட் ஆனது .இதில் இந்திய அணி தரப்பில் பும்ரா 5 விக்கெட் கைப்பற்றி அசத்தினார்.

இதன் பிறகு 13 ரன்கள் முன்னிலையில் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணி இரண்டாம் நாள் ஆட்ட முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 57 ரன்கள் எடுத்தது. இதை தொடர்ந்து 3-ம் நாள் ஆட்டம் நடைபெற்றது. இறுதியாக 67.3 ஓவரில் இந்திய அணி 198 ரன்னில் ஆல் அவுட் ஆனது. இதைத்தொடர்ந்து 212 ரன்கள் இலக்காகக் கொண்டு தென்ஆப்பிரிக்கா அணி களமிறங்கியது. இறுதியில் 3-ம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்ரிக்கா அணி 2 விக்கெட் இழப்பிற்கு 101 ரன்கள் எடுத்துள்ளது. இதில் அதிகபட்சமாக கீகன் பீட்டர்சன் 48 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *