#IND VS SA டெஸ்ட் தொடர் : இந்தியாவுக்கு எதிரான தென் ஆப்பிரிக்கா அணி அறிவிப்பு ….!!!

இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான 21 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்காவில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள உள்ள இந்திய அணி 3 டெஸ்ட், 3 ஒருநாள் மற்றும் 4 டி20 போட்டிகளில் விளையாட திட்டமிட்டிருந்து. ஆனால் தற்போது அங்கு  ‘ஒமைக்ரான்’  கொரோனா வைரஸ் பரவல் பரவி வருவதால் தென்னாபிரிக்கா செல்லும் இந்திய அணியின்  பயணத்தில் சில மாற்றம் செய்யப்பட்டதோடு ,டி20 தொடர் பின்னர் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டது .

இதனிடையே இரு அணிகளுக்கிடையேயான முதல் போட்டி 17-ம் தேதி தொடங்க இருந்த நிலையில் 26-ம் தேதி நடைபெறுகிறது . இந்நிலையில் இந்திய அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டிக்கான 21 பேர் கொண்ட தென் ஆப்பிரிக்கா அணி இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

தென் ஆப்பிரிக்கா :  டீன் எல்கர் (கேப்டன்), டெம்பா பவுமா (துணை கேப்டன்), குயின்டன் டி காக் , ககிசோ ரபாடா, சரேல் எர்வீ, பியூரன் ஹென்ட்ரிக்ஸ், ஜார்ஜ் லிண்டே, கேசவ் மகராஜ், லுங்கி என்கிடி, ஐடன் மார்க்ராம், வியான் முல்டர், அன்ரிச் நோர்ஜோ ,கீகன் பீட்டர்சன், ரஸ்ஸி வான் டெர் டுசென், கைல் வெர்ரேய்ன், மார்கோ ஜான்சன், க்ளென்டன் ஸ்டுர்மன், ப்ரீனெலன் சுப்ரயன், சிசண்டா மாகலா, ரியான் ரிக்கல்டன், டுவான் ஆலிவியர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *