IND VS SA டெஸ்ட் : 5 பந்துவீச்சாளர்களுடன் இந்திய அணி களமிறங்க வாய்ப்பு ….! கே.எல். ராகுல் பேச்சு ….!!!

இந்தியா-தென்ஆப்பிரிக்கா  அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி  நாளை தொடங்குகிறது.

இந்தியா – தென்ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி நாளை செஞ்சூரியனில் நடைபெற உள்ளது. இந்நிலையில் இந்திய அணியின் துணை கேப்டனான கே.எல். ராகுல் நேற்று பேட்டியில் கூறும்போது,” கடைசியாக இங்கு கடந்த 2017 -18 ஆம் ஆண்டு விளையாடிய போட்டியை விட இம்முறை இன்னும் சிறப்பாக தயாராகியுள்ளோம். நானும் மயங்க் அகர்வாலும் அணிக்கு வலுவான தொடக்கத்தை தருவோம் என நம்புகிறேன். அதேசமயம் முதல் 30-35 ஓவர்களில் விக்கெட்டுகள் இழக்கக் கூடாது என்பதில் கவனம் செலுத்துகிறேன்.இதில்  பெரும்பாலான அணிகள் 5 பந்துவீச்சாளர்களுடன் தான் போட்டியை தொடங்குகின்றனர் .

ஏனென்றால் ஒவ்வொரு அணியும் 20 விக்கெட் வீழ்த்த விரும்புகின்றது. அதேபோல் டெஸ்ட் தொடரில் வெற்றி பெற ஒரே வழி அது தான். இதனால் நாங்களும் வெளிநாடுகளில் இந்த யுத்தியை கடைபிடித்து இருக்கிறோம் .அதோடு அணியில் 5 பந்து வீச்சாளர்களுடன் களம் இறங்கும்போது அவர்களின் பணிச்சுமை சற்று குறையும் .எனவே இந்த டெஸ்ட் போட்டியிலும் நாங்கள் 5 பந்து வீச்சாளர்களுடன் களமிறங்க வாய்ப்புள்ளது “என்றார் . மேலும் பேசிய அவர் ,”அணியில் ரஹானே,  ஹனுமா விஹாரி மற்றும் ஸ்ரேயாஸ் அய்யர் ஆகிய மூவரில்  யாரை தேர்வு செய்வது என்பதை முடிவு செய்வது மிகவும் கடினமானது .

ஏனெனில் டெஸ்ட் தொடரில் ரஹானே மிகவும் முக்கியமான வீரர் ஆவார். அதேசமயம் இக்கட்டான சூழலில்  சிறப்பாக விளையாடி உள்ளார் .அதேபோல் ஸ்ரேயாஸ் அய்யர் அறிமுக டெஸ்ட் போட்டியிலேயே தனக்கு கிடைத்த வாய்ப்பை சரியாக பயன்படுத்தி உள்ளார் .அதுபோல்  விஹாரியும் நன்றாக விளையாடியுள்ளார் .இதனால் இதில் முடிவு எடுப்பது மிகவும் கடினமான ஒன்று .அதே போல் இங்குள்ள ஆடுகளங்களில் வேகமும்,பவுன்சும் இருக்கும். அதே சமயம் மற்ற நாடுகளை ஒப்பிடும்போது இது வித்தியாசமானது .இதனால் இங்குள்ள சூழலுக்கேற்ப எங்களை நாங்கள் மாற்றிக்கொள்ள முயற்சி செய்து வருகிறோம்” இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *