IND VS SA :தென்னாபிரிக்காவை வீழ்த்தியது இந்தியா ….! 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி ….!!!

தென்னாபிரிக்கா அணிக்கெதிரான முதல் டெஸ்ட் போட்டியில் 113 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி பெற்றுள்ளது .

இந்தியா – தென்னாபிரிக்கா அணிகளுக்கிடையேயான முதல் டெஸ்ட் போட்டி செஞ்சூரியனில்  நடைபெற்றது .இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய இந்திய அணி முதல் இன்னிங்சில் அனைத்து விக்கெட் இழப்புக்கு 327 ரன்கள் எடுத்தது.இதன் பிறகு முதல் இன்னிங்சை தொடங்கிய தென் ஆப்பிரிக்கா அணி 197 ரன்னில் ஆல் அவுட் ஆனது .இதனால் 130 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது .ஆனால் தென்னாபிரிக்க அணியின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டை பறிகொடுத்தது .இறுதியாக இந்திய அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 172 ரன்னில் சுருண்டது. இதனால் 304 ரன்கள் முன்னிலையில் இந்திய அணி இருந்தது. இதன் பிறகு 305 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தென்ஆப்பிரிக்கா அணி 2-வது இன்னிங்சை தொடங்கியது .

இறுதியில் 4-ம் நாள் ஆட்ட முடிவில் தென் ஆப்பிரிக்க அணி 4 விக்கெட் இழப்புக்கு 94 ரன்கள் எடுத்தது .இந்த நிலையில் 5-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் சிறப்பாக விளையாடி வந்த டீன் எல்கர் 77  ரன்னில் ஆட்டமிழந்தார். இதன் பிறகு களமிறங்கிய டி காக் 21 ரன்னும், முல்டர் 1 ரன்னும்  எடுத்து ஆட்டமிழந்தனர் .இதனால் மதிய உணவு இடைவேளை வரை தென்ஆப்பிரிக்கா 7 விக்கெட் இழப்புக்கு 182 ரன்கள் எடுத்திருந்தது . இதன்பிறகு களமிறங்கிய  யான்சென் 13 ரன்னும்  ரபாடா , இங்கிடி ஆகியோர் ரன் எடுக்காமல் ஆட்டமிழந்து வெளியேறினார்.இறுதியாக தென்ஆப்பிரிக்க அணி அனைத்து விக்கெட் இழப்புக்கு 191 ரன்னில் சுருண்டது. இதனால் 113 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்ற இந்திய அணி 1-0 என்ற கணக்கில் தொடரில் முன்னிலையில் உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *