IND VS NZ டி20 போட்டி : நியூசி.யிடம் வீழ்ந்தது இந்திய மகளிர் அணி ….!!!

இந்தியா- நியூசிலாந்து மகளிர் அணிகளுக்கு இடையேயான டி20 போட்டியில் 18 ரன்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணி வெற்றி பெற்றது.

இந்திய மகளிர் அணி நியூசிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகின்றது. இதில் இரு அணிகளுக்கிடையேயான ஒரேயொரு டி20 போட்டி இன்று நடைபெற்றது. இதில் டாஸ் வென்ற இந்திய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் குவித்தது.

இதில் அதிகபட்சமாக பேட்ஸ் 36 ரன்னும் ,கேப்டன் டெவைன் 31 ரன்னும் எடுத்தனர். இதன்பிறகு களமிறங்கிய இந்திய அணி தொடக்கத்திலேயே விக்கெட்டை இழந்து தடுமாறியது. இறுதியாக 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்புக்கு 134 ரன்னில் சுருண்டது. இதன் மூலம் 18 ரன்கள்  வித்தியாசங்கள் வெற்றி பெற்ற நியூசிலாந்து அணி டி20 தொடரை வென்றது.