IND vs NZ : இன்று கடைசி ஒருநாள் போட்டி…. தொடரை சமன் செய்யுமா இந்தியா?

இன்றைய கடைசி ஒருநாள் போட்டியில் இந்தியா – நியூசிலாந்து அணிகள் மோதுகிறது..

இந்திய அணி தற்போது நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகின்றது. இதில் 3 போட்டிகள்  கொண்ட டி20 தொடரை மழைக்கு நடுவே 1:0 என்ற கணக்கில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான இந்திய அணி கைப்பற்றியது.. இதனை தொடர்ந்து ஷிகர் தவான் தலைமையிலான இந்திய அணி நியூசிலாந்துக்கு எதிராக 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது..

இதில் முதலில் நடைபெற்ற ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்து அணியிடம் தோல்வியடைந்தது. அதனை தொடர்ந்து ஹேமில்டனில் நடைபெற்ற இரண்டாவது ஒருநாள் போட்டி மழையால் பாதியிலேயே கைவிடப்பட்டது. இந்நிலையில் நியூசிலாந்து மற்றும் இங்கிலாந்து அணிகள் மோதும் மூன்றாவது மற்றும் கடைசி ஒரு நாள் போட்டி இந்திய நேரப்படி இன்று காலை 7 மணிக்கு கிறிஸ்ட்சர்ச் மைதானத்தில் நடைபெற உள்ளது..

இந்திய அணி வெற்றி பெற வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. ஒருவேளை இந்த போட்டி மழையால் ரத்து செய்யப்பட்டாலோ, தோல்வி அடைந்தாலோ இந்திய அணி தொடரை இழந்து விடும். எனவே தொடரை சமன் செய்ய இந்திய அணி போராடும் என்பதில் சந்தேகம் சந்தேகம் இல்லை.. அதே சமயம் சொந்த மண்ணில் வில்லியம்சன் தலைமையிலான நியூசிலாந்து அணி இந்த போட்டியிலும் வெற்றி பெற்று தொடரை 2-0 என்ற கணக்கில் வெற்றி பெறும் முனைப்புடன் களமிறங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது..

இந்தியா :

ஷிகர் தவான்(கே), ஷுப்மன் கில், ஷ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த் (வி.கீ), சூர்யகுமார் யாதவ், சஞ்சு சாம்சன், வாஷிங்டன் சுந்தர், ஷர்துல் தாக்கூர், உம்ரான் மாலிக், அர்ஷ்தீப் சிங், யுஸ்வேந்திர சாஹல், தீபக் ஹூடா, குல்தீப் யாதவ், தீபக் சாஹர்.

நியூசிலாந்து :

ஃபின் ஆலன், டெவோன் கான்வே, கேன் வில்லியம்சன்(கே ), டேரில் மிட்செல், டாம் லாதம்(வ), க்ளென் பிலிப்ஸ், மிட்செல் சான்ட்னர், ஆடம் மில்னே, மாட் ஹென்றி, டிம் சவுத்தி, லாக்கி பெர்குசன், மைக்கேல் பிரேஸ்வெல், ஜேம்ஸ் நீஷம்.