ஈரோடு மாவட்டத்தில் நட்சத்திர ஆமைகளின் எண்ணிக்கை அதிகரிப்பு…..!!

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் நட்சத்திர ஆமைகளின் எண்ணிக்கை முன்பு இல்லாத அளவுக்கு அதிகரித்துள்ளது.

நீலகிரி மாவட்டத்தில் உள்ள  வனப் பகுதியை கடந்து பவானிசாகர் அணைக்கு வந்து சேரும் மாயாற்றின்  இருபுறமும் உள்ள வனப்பகுதியில் புலி, சிறுத்தை, யானை, கழுதைபுலி, மான் உள்ளிட்ட விலங்குகள் வசிக்கின்றன. இந்நிலையில் மாயாற்றுப் படுகையை ஒட்டியுள்ள பகுதியில்   நட்சத்திர ஆமைகள் வெகுவாக அதிகரித்துள்ளதாக  கூறப்படுகிறது.

நட்சத்திர ஆமைகள் மருத்துவ குணம் உடையது என கருதி வெளிநாடுகளுக்கு கடத்தப்படுகின்றன. இந்த நட்சத்திர ஆமைகள் வறட்சியான பகுதியில் நீர் இன்றி அதிக நாட்கள் வாழும் தன்மையுடையது என வனத்துறையினர் கூறுகின்றனர். பவானிசாகரிலிருந்து தெங்கு மரஹாடா செல்லும் சாலையில் நட்சத்திர ஆமைகளின் நடமாட்டம் அதிகம் உள்ளது. அரிய வகை  உயிரினமான நட்சத்திர ஆமைகள் வாகனங்களில் அடிபட்டு இறந்து விடாமல் தடுக்க கவனமுடன் வாகன ஓட்டிகள் இயக்குமாறு வனத்துறையினர் வாகன ஓட்டிகளுக்கு அறிவுறுத்தினர்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *