”நம்பமுடியாத மறுபிரவேசம்”…. ஸ்மித்தை புகழ்ந்த சச்சின்.!!

ஸ்டீவ் ஸ்மித்  ”நம்பமுடியாத மறுபிரவேசம்” என்று சச்சின் டெண்டுல்கர் புகழ்ந்து கூறியுள்ளார்.  
ஆஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான ஆஷஸ் தொடரின் 4வது டெஸ்ட் போட்டி இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் முதலில் ஆஸ்திரேலிய அணி பேட்டிங் ஆடி வருகிறது. இப்போட்டியில் 2-ஆவது டெஸ்ட் போட்டியின்போது ஜோப்ரா ஆச்சர் பவுன்சர்  பந்துவீச்சில் பலமாக தலையில் தாக்கப்பட்ட ஸ்டீவ் ஸ்மித் ஓய்வுக்குப் பிறகு புத்துணர்ச்சியுடன் களமிறங்கினார். இதில் சிறப்பாக ஆடிய ஸ்மித் தனது 26-வது சதத்தை பூர்த்தி செய்தார்.
Image
இதன்மூலம் குறைவான இன்னிங்சில் 26 சதங்கள் கடந்த  வீரர்கள் பட்டியலில் 2-ஆம்  இடத்தைப் பிடித்துள்ளார். இதற்கு முன்னதாக சச்சின் டெண்டுல்கர் 136 இன்னிங்சில் 26 சதங்களை பூர்த்தி செய்திருந்தார். தற்போது ஸ்டீவ் ஸ்மித் 121 இன்னிங்சில் 26 ஆவது சதத்தை எட்டியுள்ளார். தொடர்ந்து சிறப்பாக ஆடிய ஸ்டீவ் ஸ்மித் தனது 3-ஆவது இரட்டை சதத்தை பதிவு செய்தார்.
Image result for COMPLICATED TECHNIQUE but an ORGANIZED MINDSET is what sets @stevesmith49 apart. Incredible comeback!
இந்நிலையில் சதமடித்த ஸ்மித்தை சச்சின் டெண்டுல்கர் தனது ட்விட்டரில் புகழ்ந்து கூறியுள்ளார். அதில்,  ”சிக்கலான தொழில்நுட்பம். ஆனால் ஒரு ஒழுங்கமைக்கப்பட்ட மனநிலை என்பது ஸ்மித்தை வேறுபடுத்துகிறது. நம்பமுடியாத மறுபிரவேசம்” என்று தெரிவித்தார்.

Subscribe

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *