அதிகரிக்கும் தற்கொலைகளை உரிழப்புகளை தவிர்க்கும் விதமாக எலி பேஸ்ட் மருந்தை நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.
தற்பொழுது தற்கொலைக்கு அதிக அளவில் பயன்படுத்தும் உயிர் கொல்லி மருந்தாக எலி பேஸ்ட் திகழ்ந்து வருவதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார். சென்னையில் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர்,

பெரும்பான்மையான மக்கள் தற்கொலை முடிவுக்கு செல்லும் பொழுது வீட்டில் இருக்கக் கூடிய எலி பேஸ்ட் மருந்துகளை உண்டு தற்கொலை செய்து கொள்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்து வருகிறது என்றும், எலி பேஸ்டில் நஞ்சின் அளவு அதிகமாக இருப்பதால் அதனை உட்கொள்வோரை காப்பாற்றுவதற்கு மருத்துவர்களும் மிகுந்த சிரமத்திற்கு ஆளாவதாக அவர் தெரிவித்தார்.
இதன் மூலம் பெரும்பான்மையான உயிரிழப்புகளை தவிர்க்கும் விதமாக எலி பேஸ்ட்களை தடை செய்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார். மேலும் இது குறித்து பல்வேறு துறையினரிடம் விவாதித்து கொண்டிருப்பதாக தெரிவித்த அவர், இதனை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் கவனத்திற்கு கொண்டு சென்று விரைவில் எலி பேஸ்ட்டை தடை செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.