தென் மாவட்ட ரயில்களின் வேகம் அதிகரிப்பு… அதிகாரிகள் தகவல்… விரைவில் வெளியாகும் அறிவிப்பு…!!!!!

சென்னை எழும்பூரில் இருந்து மதுரை வரை இரட்டை ரயில் பாதை அமைக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து மதுரையிலிருந்து நாகர்கோவிலுக்கு இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி தற்போது நடைபெற்றுக் கொண்டிருந்தது. இந்நிலையில் மதுரை முதல் திருநெல்வேலி வரையிலான பணி நிறைவடைந்துள்ளது. மேலும் வாஞ்சி மணியாச்சி முதல் தூத்துக்குடி வரையும் திருநெல்வேலி முதல் நாகர்கோவில் வரையும் இரட்டை ரயில் பாதை அமைக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. தற்போது இந்த பணி இறுதி கட்டத்தை எட்டியுள்ள நிலையில் அங்கு இயக்கப்படும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது.

அதாவது தென் மாவட்டங்களில் இரட்டை ரயில் பாதை பணி நிறைவு பெற உள்ள நிலையில் திருநெல்வேலி – கன்னியாகுமரி செல்லும் ரயில்களின் வேகம் அதிகரிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் கோவை – நாகர்கோவில் விரைவு ரயில் சென்னை எழும்பூர் – கன்னியாகுமரி விரைவு ரயில் முன்பை விட முன்னதாகவே வந்து சேர்கிறது. மேலும் செங்கோட்டை – நெல்லை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களும் வழக்கமான நேரத்தை விட முன்னதாக இயக்கப்படுவதால் ரயில்களின் வேகம் அதிகரிப்பு குறித்த விரைவில் அதிகாரப்பூர் அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.