வருமான வரி துறையினர் அதிரடி….. 50_க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனை….!!

டெல்லி உள்ளிட்ட நகரங்களின் 50 இடங்களில் வாருமான வரித்துறையினர் அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநில முதலமைச்சர் கமல்நாத்தின் சிறப்பு பணி அதிகாரி பிரவீன் காக்கர் இல்லம் , அமீரா குழுமம் மற்றும் மோசர்பேயர் நிறுவனத்தின் தலைவர் ரதுல் பூரியின் வீடு உள்ளிட்ட பல்வேறு இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனை நடந்து வருகிறது.  இதே போல டெல்லி, கோவா, இந்தூர், போபால் உள்ளிட்ட நகரங்கள் என 50_க்கும் மேற்பட்ட  இடங்களில் அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

டெல்லி, கோவா உள்ளிட்ட 50 இடங்களில் வருமான வரி துறையினர் சோதனை

இந்த சோதனையில் பிரதீக் ஜோஷி என்பவரது இல்லத்தில் கட்டு கட்டாக சூட்கேஸ்களில் பணம் நிரப்பி இருந்தது கண்டறியப்பட்டது.இந்த அதிரடி சோதனையில் சுமார் 300க்கும் மேற்பட்ட வருமான வரி துறையினர் நடத்தி வருகின்றனர்.  முக்கிய பிரமுகர்களுக்கு ஹெலிகாப்டர்கள் வாங்குவதில் நடந்த ஊழலில் கடந்த 2 நாட்களுக்கு முன் பூரியிடம் அமலாக்க துறை விசாரணை நடத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.