கோழி உட்பட….. எந்த பறவை இருந்தாலும் கொன்னுடுங்க….. மைசூர் கலெக்டர் உத்தரவு….!!

கர்நாடக மாநிலம் மைசூரில் பறவை காய்ச்சல் அதிகமாக பரவி வருவதால் வீடுகளில் உள்ள கோழி பறவைகளை கொன்று விடுமாறு மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார்.

கொரோனா  வைரசை போல் மற்றொரு காய்ச்சல் கேரளா மற்றும் கர்நாடக மாநிலங்களில் அதி விரைவாக பரவி வருகிறது. அது என்னவென்றால் அது தான் பறவை காய்ச்சல்.  இந்த பறவை காய்ச்சல் கேரள மாநிலம் கோழிக்கோடு மாவட்டத்திலும், கர்நாடக மாநிலம் மைசூர் மாவட்டத்திலும் பரவி அதிக அளவில் காணப்படுகிறது.

கொரோனா குறித்த அச்சம்  ஒரு புறம் இருக்க பறவை காய்ச்சல் நோய் பரவினால் கட்டுப்படுத்த முடியாது என்ற காரணத்தினால் மக்கள் தங்கள் வீடுகளில் உள்ள கோழி பறவைகளை உடனடியாகக் கொன்றுவிடுமாறு   மைசூர் ஆட்சியர் தெரிவித்துள்ளார். இந்த அறிவிப்பு பறவை ஆர்வலர்கள் இடையே பெரும் அதிருப்த்தியை ஏற்படுத்தியுள்ளது.