“அரவக்குறிச்சி இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர் வெற்றி பெறுவது உறுதி “விஜயபாஸ்கர் பரப்புரை பேச்சு !!..

கரூர் மாவட்டம்  அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தல் வேட்பாளர் விவி செந்தில்நாதனை ஆதரித்து அமைச்சர் விஜயபாஸ்கர் ,செங்கோட்டையன் தங்கமணி ஆகியோர் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வாக்கு சேகரித்து  வருகின்றனர் 

கரூர் மாவட்டம் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத் தேர்தல் தொகுதி அதிமுக வேட்பாளராக வீதி செந்தில்நாதன் தேர்ந்தெடுக்கப்பட்டார் இதையடுத்து அவருக்கு ஆதரவாக அமைச்சர் எம் ஆர் விஜயபாஸ்கர் தங்கமணி செங்கோட்டையன் உள்ளிட்டோர் இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களிக்க பிரச்சாரப் பயணத்தின் ஈடுபட்டனர் இந்நிலையில் நேற்றைய தினம் போக்குவரத்து துறை அமைச்சர் விஜயபாஸ்கர் செந்தில் நாதன் அவர்களுக்கு ஆதரவாக பிரச்சாரத்தில் ஈடுபட்டபோது இவ்வாறு பேசினார்,

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் ஆகியோர் ஏழை மக்களுக்காக ஏராளமான நலத்திட்டங்களை செய்து வருகின்றனர் குறிப்பிட்டுக் கூற வேண்டுமென்றால் அரவக்குறிச்சி குடிநீர் பிரச்சனைக்காக 220 கோடியை தமிழக அரசு ஒதுக்கியுள்ளது மேலும் அரவக்குறிச்சி சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் வெற்றி பெறுவார் என்று கனவு கண்டு கொண்டே இருக்கிறார் அதனை முறியடிக்கும் விதமாக மக்களின் பேராதரவைப் பெற்று விவி செந்தில்நாதன் அமோக வெற்றி பெறுவது உறுதி என்று அவர் பேசினார் பேசி முடித்த பின் வீடு வீடாக சென்று இரட்டை இலை சின்னத்துக்கு வாக்கு சேகரித்தார்